புதுடெல்லி: ஆந்திர மாநில இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்ற அரசாங்கம் உறுதி தெரிவித்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஆந்திர மாநில முதல்வரின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்தப் புகைப்படங்களை ‘எக்ஸ்’ சமூகத் தளத்தில் அவர் பகிர்ந்துகொண்டார்.
ஆந்திர மாநிலத்தின் புகழை புதிய உயரங்களுக்குக் கொண்டுசெல்லவும், மாநில இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது எனத் திரு மோடி வாக்குறுதி அளித்தார்.




















