கோலாலம்பூர்:
கொலை செய்யப்பட்ட ஆட்டிஸம் சிறுவன் ஜெய்ன் ரய்யானின் தாத்தா, பாட்டி இன்று போலீஸ் பிணையில் விடுவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக இரு சந்தேகநபர்களும் நேற்று கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று வழக்கறிஞர் ஃபஹ்மி அப்துல் மொயின் கூறினார்.
இருப்பினும் அவர்கள் இருவரும் இன்று காலை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்ட பின்னர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.




















