பீஜிங்: சீனாவில் முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 80 வயது முதியவர் அங்கு சேவை செய்து வந்த 23 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இணையத்தில் அவர்களது புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் 90ஸ் கிட்ஸ் சோக கீதம் பாடி வருகின்றனர்.
இந்த உலகத்தில் எவ்வளவோ விஷயங்கள் மாறிவிட்டாலும் இன்றும் மாறாமல் அப்படியே இருப்பது காதல் மட்டும் தான் காதலுக்கு கண்கள் மட்டுமல்ல ஜாதி மதம் வயது மொழி என எதுவுமே தெரியாது. பார்த்தவுடன் காதல், பார்க்காமலே காதல், கடிதத்தில் காதல் தொடங்கி தற்போது இன்ஸ்டாகிராம் காதல் வரை வந்து விட்ட போதும் தன்னுடைய தன்மையை மாற்றிக் கொள்ளாமல் காதல் மட்டும் காதலித்துக் கொண்டே இருக்கிறது.
காதலர்கள் இருக்கும் வரை காதலுக்கு அழிவில்லை.. காதல் இருக்கும் வரை காதலர்களுக்கும் பஞ்சமில்லை. எல்லை தாண்டிய காதல்கள் திடீரென உலகம் முழுவதும் வைரல் ஆவது வழக்கம் தான். அப்படி ஒரு சம்பவம் தான் சீனாவில் நடைபெற்றிருக்கிறது. என்பது வயதான ‘முதிய இளைஞர்’ ஒருவர் தனது பேத்தியின் வயதில் இருக்கும் 23 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது அவர்களது புகைப்படமும் இந்த காதல் பெயரையும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் 80 வயதான லீ ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார். பிள்ளைகள் அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட தனிமை அவரை வாட்டி வதைத்து இருக்கிறது. இதையடுத்து அங்குள்ள பலரிடம் மனம் விட்டு பேசுவதையே தனது வழக்கமாக கொண்டிருக்கிறார். அப்படி நீ பேசிய பேச்சு அவருக்கு ஒரு புதிய துணையை தந்திருக்கிறது. புதிய துணைக்கு வயது 23 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தினர் அனைவரையும் பிரிந்த அந்த இளம் பெண் எளிய முறையில் லீயை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இந்த புதிய காதல் ஜோடியின் படங்களும் அவர்கள் குறித்த செய்தியும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து உலகம் முழுவதும் இருந்து அந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அதே நேரத்தில் முதியவர் லீ பணக்காரர் என்பதால் பணத்துக்காகவே அந்த இளம் பெண் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற விமர்சனங்களையும் பார்க்க முடிகிறது. எது எப்படி இருந்தாலும் காதல் எதையுமே பார்க்காது அப்படி பார்த்தால் அது காதலே கிடையாது.