‘ஆடுதாம் ஆந்திரா’ நிகழ்ச்சியில் ரூ.100 கோடி முறைகேடா?

நடிகை ரோஜா, சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தபோது ஆடுதாம் ஆந்திரா என்ற நிகழ்ச்சிக்காக ஒதுக்கிய ரூ 100 கோடி நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரியும் புகார் எழுந்துள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் நடிகை ரோஜா. இவருக்கு கடைசி இரண்டரை ஆண்டுகள் சுற்றுலா, விளையாட்டு, இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. கடந்த இரண்டு முறை நகரி தொகுதிகள் வெற்றி பெற்று எம்எல்ஏ-வான நடிகை ரோஜா, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். மேலும் அம்மாநிலத்தில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒஎஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

இந்நிலையில், நடிகை ரோஜா அமைச்சராக இருந்தபோது, ‘ஆடுதாம் ஆந்திரா’ எனும் நிகழ்ச்சி ஆந்திரா முழுவதும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி தோல்வி அடைந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக, ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு ரூபாய் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக தெரிவித்திருந்தது.

இதனிடையே நடிகையும் முன்னாள் அமைச்சருமான ரோஜா விரைவில் சிறைக்கு செல்வது உறுதி என தெலுங்கு இளைஞரணி ஆந்திர மாநில தலைவர் ரவி நாயுடு தெரிவித்துள்ளார். சிபிசிஐடியிடம் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here