பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு.. வாரணாசி பேரணியில் பரபரப்பு.. பின்னணியில் யார்?

வாரணாசி: லோக்சபா தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி சென்ற நிலையில் அவரது கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் என்பது நடந்து முடிந்தது. 543 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மத்தியில் ஆட்சியமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. இதையடுத்து கூட்டணியில் உள்ள 52 எம்பிக்கள் உதவியுடன் பாஜக மத்தியில் 3வது முறையாக ஆட்சியை பிடித்தது.

இதையடுத்து பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். ‛‛இனி ரேபரேலி தான் அடையாளம்”.. வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்! களமிறங்கும் பிரியங்கா இந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2014, 2019 ஆகிய தேர்தல்களை போல் இந்த முறையும் அவர் வாரணாசி தொகுதியில் வாகை சூடி எம்பியானார். இந்த தேர்தலில் பிரதமர் மோடி 6 லட்சத்து 12 ஆயிரத்து 970 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,60,457 ஓட்டுகள் பெற்றார். இதனால் பிரதமர் மோடி 1,52,513 ஓட்டுகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்று எம்பியானார்.

இந்நிலையில் தான் பிரதமராக 3வது முறையாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மோடி நேற்று வாரணாசி சென்றார். ‘பிஎம் கிசான் சமேளன்’ திட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் 17 வது தவணையாக ரூ.20000 கோடி ரூபாயை விடுவித்தார். மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்த வேளையில் பிரதமர் மோடி காரில் வாரணாசியில் ஊர்வலமாக சென்றார். காரின் முன்இருக்கையில் பிரதமர் மோடி அமர்ந்திருந்த நிலையில் சாலையின் இருபுறமும் பாஜகவினர் நின்று அவரை வரவேற்றனர். இந்த வேளையில் திடீரென்று பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசப்பட்டது.

 JDU கூட்டத்தில் இருந்து பறந்து வந்த செருப்பு பிரதமர் மோடி பயணித்த காரின் முன்புறத்தில் விழுந்தது. இதையடுத்து பாதுகாவலர் அந்த செருப்பை காரில் இருந்து எடுத்து அப்புறப்படுத்தினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீசியது யார்? பின்னணி என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீசிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here