தீபிகா படுகோனேவின் கையை பிடிக்க போட்டிபோட்ட பிரபலங்கள்

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கல்கி 2898 ஏ.டி. இப்படத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்பட பலர் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் அறிவியல் கலந்து உருவாக்கப்பட்டுள்ள புராண காலத்து கதையான இந்த படம் வருகிற 27-ந்தேதி சர்வதேச அளவில் திரைக்கு வர இருக்கிறது.

இதையொட்டி படத்தின் பிரி ரிலீஸ் விழா மும்பையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர். கர்ப்பிணியாக உள்ள தீபிகா படுகோனேவும் விழாவில் பங்கேற்றார்.

விழா தொடங்கியதும் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். தீபிகா படுகோனே மேடையில் ஏறும்போது அவரது கையை பிடித்து உதவி செய்வதற்காக பிரபாஸ் முன் வந்தார். அதற்குள் ஓடி வந்த அமிதாப்பச்சன் நான் பிடித்துக்கொள்கிறேன். நீங்கள் வாருங்கள் என கூறி தீபிகா படுகோனே மேடை ஏற உதவினார். பிரபாஸ், அமிதாப்பச்சன் இடையே நடந்த போட்டா போட்டியில் சிறிது நேரம் விழா அரங்கம் சிரிப்பொலியில் அதிர்ந்தது.

தொடர்ந்து விழாவில் அமிதாப்பச்சன் பேசியதாவது:- நாக் அஸ்வின் கல்கி 2898 ஏ.டி. படத்தின் கதையை என்னிடம் கூறும்போது இதெல்லாம் சாத்தியமா? என யோசித்தேன். மேலும் இவர் குடித்திருக்கிறாரா? என்று கூட நினைத்தேன். இப்போது படத்தை பார்க்கும் போது அற்புதமான படைப்பாக வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here