நாட்டில் 11 புதிய போக்குவரத்து திட்டங்கள் அறிமுகம் -பிரதமர்

DCIM100MEDIADJI_0009.JPG

கோலாலம்பூர்:

நிலையான மற்றும் நெகிழக்கூடிய தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக மொத்தம் 11 புதிய போக்குவரத்து மற்றும் லோஜிஸ்டிக் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்தார்.

கேள்விக்குரிய திட்டங்கள் பான் போர்னியோ நெடுஞ்சாலை சபா கட்டம் 1B கட்டுமானம் ; பினாங்கு இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம்; பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் விரிவாக்கம்; சுபாங், சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தின் மேம்பாடு; மற்றும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையை பேராக்கில் இருந்து ஜெலி, கிளாந்தான் வரை மேம்படுத்துதல் என்பன அவற்றில் அடங்கும்.

மேலும், ரேப்பிட் பஸ் சேவை, ஜொகூர்பாரு, கிள்ளான் பள்ளதாக்குகளின் பேருந்து சேவை, செனாய் – டேசாருவை இணைக்கும் நெடுஞ்சாலையின் மேம்பாடு, யோங் பெங் – வடக்கு செனாயை இணைக்கும் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலை, சபா – சரவாக்கை இணைக்கும் சாலை, கேமரன் மலை தானா ராத்தாவையும் கீ பார்ம் சாலை மேம்படுத்தப்படும்.

“கிள்ளான் துறைமுகம் போன்று புதியதாக பூலாய் கேரியில் புதிய துறைமுகம் மேப்படுத்தப்படும் என்று 12-ஆவது மலேசிய திட்டத்தில் பிரதமர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here