கோத்தா கினாபாலு:
மெம்பாகுட் மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 45 குடும்பங்களைச் சேர்ந்த 114 நபர்களாக அதிகரித்துள்ளது, இந்த எண்ணிக்கை நேற்றுக் காலை 40 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேராக இருந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பியூஃபோர்ட்டில் உள்ள டேவான் சிலாகான் நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று சபா பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“கடந்த வியாழன் முதல் மெம்பாகுட்டில் பெய்த தொடர் மழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது, இன்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது ” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.