சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்: ஒற்றுமை அரசின் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்குமாறு இளம் வாக்காளர்களுக்கு பிரதமர் நினைவூட்டல்

நிபோங் தெபால்:

சுங்கை பாக்காப் இடைத்தேர்தல் வாக்காளர்கள், குறிப்பாக இளைஞர்கள், ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவூட்டியுள்ளார் என்று அவரது மூத்த அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் முகம்மது அகின் கூறினார்.

சுங்கை பாக்காப்பில் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் மேம்பாட்டை முழுமையாக செயல்படுத்தப்படுவதற்கு இந்த செயல்முறை மிகமுக்கியமானது என்று அவர் சொன்னார்.

“இப்போது பினாங்கு அரசாங்கம் கூட்டாட்சி அரசாங்கத்துடன் ஒத்துப்போகிறது. எனவே மாநில அரசு மற்றும் பிரதமருக்கு உதவி செய்யக்கூடிய வேட்பாளரை ஆதரிக்க உதவுங்கள்” என்று கம்போங் சுங்கை டூரி சமூக இயக்கத்தில் மடானி B40 திட்டத்தை நிறைவேற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

அன்வாரின் பிறப்பிடமான சுங்கை பாக்காப் பகுதி குறித்து அவர் அக்கறை கொண்டுள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள மக்கள் மீது எப்போதும் கவனம் செலுத்துவதாகவும் கூறிய அவர், அண்மையில் மஸ்ஜிட் லாமா சுங்கை பாக்காப்பின் வளர்ச்சிக்காக 7 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

எனவே ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் சுங்கை பாக்கப் பகுதி மக்கள் நன்மையடைய முடியும் என்பது வெளிச்சமாக தெரிகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here