புத்ராஜெயா:
புகைபிடித்தலுக்கு எதிரான புதிய சட்டம் தொடர்பான தனது பரிந்துரைகளை சுகாதாரத்திற்கான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 18) பிற்பகலில் இறுதி செய்யும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
பொது சுகாதாரத்திற்கான புகைபிடித்தல் தயாரிப்புக் கட்டுப்பாடு மசோதா 2023, வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் அதன் இரண்டாவது வாசிப்புக்காக தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் “குறித்த மசோதா தொடர்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இருந்தன, அது தொடர்பில் இன்று பிற்பகல் விவாதிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
காதாரத்திற்கான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழுவால் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் கூட்டு விலை, புகையிலை பொருட்கள் மீதான வரி மற்றும் இளம் குற்றவாளிகளுக்கு சமூக சேவை தண்டனைகளை அமல்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று டாக்டர் ஜாலிஹா கூறினார்.




















