கோத்தா கினாபாலு:
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 144 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 474 பேர் அங்குள்ள நான்கு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை இந்த எண்ணிக்கை 147 குடும்பங்களைச் சேர்ந்த 481 பேராக இருந்தது என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.




















