கோலாலம்பூர்:
இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, தேசிய மோசடி பதிலளிப்பு மையத்திற்கு (NSRC) பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 37,002 அழைப்புகள் பதிவாகியுள்ளது, இது மொத்தமாக RM203.33 மில்லியன் இழப்புடன் சம்மந்தப்பட்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி NSRC மையம் நிறுவப்பட்டதில் இருந்து, பொதுமக்களிடமிருந்து மொத்தம் 95,094 அழைப்புகள் வந்துள்ளன.
இதில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் மோசடி வழக்குகளுக்காக 10,649 விசாரணை ஆவணங்களை போலீசார் திறந்துள்ளனர் என்று அவர் சொன்னார்.
“RM72.38 மில்லியன் மதிப்புள்ள 637 கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், பணமோசடிக்கான 74 விசாரணை ஆவணங்களும் திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், இதில் RM72.38 மில்லியன் மதிப்பிலான 637 கணக்குகள் முடக்கப்பட்டன என்று அப்துல் கேள்விக்கு நாடாளுமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வமான பதிலில் அவர் கூறினார்.
இணைய மோசடி குற்றங்களைக் கையாள்வதில் NSRC எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பது குறித்து வினா எழுப்பிய லத்தீஃப் அப்துல் ரஹ்மானின் கேள்விக்குப் பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.
NSRC மற்றும் மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் ஆகியவை மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் மேலும் கூறினார்.




















