அதிபர் தேர்தலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை – ஜோ பைடன் திட்டவட்டம்

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஜோ பைடன் (வயது 81), குடியரசு கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் (வயது 78) ஆகியோர் நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இதில் ஜோ பைடன் சிறப்பாக செயல்படவில்லை. அவர் பல இடங்களில் திணறினார்.

இதனால் அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று சொந்த கட்சியை சேர்ந்த சிலஎம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். இது ஜோபைடனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜோ பைடனை விட துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்புஅதிகம் இருப்பதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிபர் தேர்தலில் இருந்து விலக மாட்டேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது நிதி திரட்டும் மின்னஞ்சலில் கூறியதாவது,நான் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர். யாரும் என்னை வெளியே தள்ளவில்லை. நான் வெளியேறவில்லை, நான் இறுதிவரை இந்த போட்டியில் இருக்கிறேன்.

இந்த தேர்தலில்நாங்கள் வெற்றிபெறப் போகிறோம். நவம்பரில் டொனால்ட் டிரம்பை தோற்கடிக்க எனக்கும், துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு உதவுங்கள். நீங்கள் எத்தனை முறைவீழ்த்தப்படும்போது, மீண்டும் எழுவோம். நாம் கடினமாக உழைக்கிறோம். அதைத்தான் நான் செய்யப் போகிறேன். 2020ஆம் ஆண்டு டிரம்பை தோற்க்கடித்தோம். 2024 ஆண்டில் அவரை மீண்டும் தோற்க்கடிக்கப் போகிறோம். ஆனால் அது எளிதாகஇருக்காது.

உங்கள் ஒவ்வொருவரும் அதைச் செய்ய எனக்கு நீங்கள் பின்னால் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன்ஜீன்-பியர் கூறும்போது. அதிபர் தேர்தலில் இருந்து விலகுவது பற்றி ஜோபைடன் பரிசீலிக்கவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here