ஐரோப்பா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து- 89 பேர் உயிரிழப்பு

ஐரோப்பா நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு மொரிட்டானியா கடற்கரையில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கடலில் மூழ்கி 89 பேர் உயிரிழந்துள்ளனர். படகில் 170 பேர் பயணித்துள்ளனர். படகு கவிழ்ந்ததில் 89 புலம்பெயர்ந்தோரின் உடல்களை கடலோரக் காவல்படையினர் மீட்டுள்ளதாக மொரிடானியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில், ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் கேனரி தீவுகளை அடைய முயன்றபோது, 5,000 புலம்பெயர்ந்தோர் கடலில் இறந்ததாக இடம்பெயர்வு உரிமைகள் குழுவான வாக்கிங் பார்டர்ஸ் கடந்த ஜூன் மாதம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here