காணாமல்போன மாற்றுத்திறனாளி கினாபடங்கான் துணை மின்நிலையம் அருகே சடலமாக கண்டெடுப்பு

கோத்தா கினாபாலு:

ஜூலை 13 முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் ஊனமுற்ற நபர், ஒருவர், சபாவின் கினாபடங்கான் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு அருகே இறந்து கிடக்க இன்று கண்டெடுக்கப்பட்டார்.

அவரது வீட்டிலிருந்து சுமார் 350 மீட்டர் தொலைவில், சுமார் 10.52 மணியளவில் 31 வயதான அந்த மாற்றுத்திறனாளி ஆடவரின் சடலம் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டதாக கினாபடங்கான் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத் தலைவர் நூருல் அஸ்லான் ஷா ஜமல்லுதீன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here