சபாவில் 10 வயது மாணவன் மரணம்; உணவு விஷமானதுதான் காரணம் என அச்சம்

கோலாலம்பூர்:

பாவின் சண்டாகானில் 10 வயது மாணவன் உணவு நச்சுத்தன்மையால் இறந்ததாக நம்பப்படுகிறது.

மிஃப்சல் அனாகி ரிசாலி என்ற உயிரிழந்த சிறுவன், செக்கோலா கேபாங்சான் தாமான் ரிம்பா, சண்டாக்கானை சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவர் என்றும், அவர் பள்ளியின் கால்பந்து அகாடமியில் பயிற்சி பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

10 வயதுக்குட்பட்ட பிரிவில் அகாடமியை பிரதிநிதித்துவப்படுத்திய குறித்த சிறுவன், உணவு விஷம் காரணமாக தனது சொந்த ஊரில் உயிரிழந்ததாக கால்பந்து அகாடமி தனது பேஸ்ஃபுக் பதிவில் கூறியுள்ளது.

இந்நிலையில் செகோங் சட்டமன்ற உறுப்பினர் அலியாஸ் சனி கூறுகையில், குறித்த மாணவனின் மரணம் தொடர்பில் தகவல் கிடைத்ததாகவும், தற்போது
அம் மாணவனின் மரணத்திற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here