பெட்ரோனாஸ்-பெட்ரோஸ் இடையிலான ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனத்தில் சரவாக் முதல்வர் – பிரதமர் கைச்சாத்து

கோலாலம்பூர்:

பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (Petronas) மற்றும் பெட்ரோலியம் சரவாக் பெர்ஹாட் (Petros) ஆகிய இரு நிறுவனங்கலின் ஒத்துழைப்பு தொடர்பில் கூட்டரசும் சரவாக் மாநில அரசும் ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டன.

நேற்று பெர்டானா புத்ராவில் நடந்த இந்த நிகழ்வில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் மற்றும் சரவாக் முதலமைச்சர் டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஓபங் ஆகியோரால் இந்த பிரகடனம் கையெழுத்திடப்பட்டது.

பெட்ரோனாஸ் மற்றும் பெட்ரோஸ் இடையேயான ஒத்துழைப்பு மூலம் தேசிய மற்றும் மாநில வளர்ச்சியில் ஒரு படி முன்னேறியதை இந்த ஒப்பந்தம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வர் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டம் (PDA) 1974 மற்றும் சரவாக்கின் சுத்திகரிக்கப்பட்ட எரிவாயு விநியோக கட்டளை (DGO) 2016 ஆகிய இரண்டிற்கும் அமைவாக இவ்வொப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது ,” என்று அவர் கூறினார்.

சரவாக்கின் வளர்ந்து வரும் முதிர்ச்சியையும் திறனையும் இந்த ஒப்பந்தம் பிரதிபலிப்பதாக அன்வார் கூறினார், இதில் குறிப்பிடத்தக்க ஆற்றலுடன் கூடிய ஒரு மாநில எண்ணெய் நிறுவனத்தை நிறுவுவதும் அடங்கும் என்றார் அவர்.

சரவாக்கில் பெட்ரோஸின் நிலை முறையாக அங்கீகரிக்கப்படும் அதே வேளையில், பெட்ரோனாஸின் பங்கு அப்படியே இருக்கும் என்பதை இந்த உடன்படிக்கை உறுதி செய்தது என்றும் அவர் கூறினார்.

“பெட்ரோனாஸின் பங்கு குறைக்கப்படவில்லை. அது வழக்கம் போல் தொடர்ந்து செயல்படுகிறது, ஆனால் இப்போது சரவாக்கின் மேம்படுத்தப்பட்ட பொறுப்புகள் மற்றும் பெட்ரோஸின் பங்கையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் ஒரு கட்டமைப்பிற்குள்.

“இந்த புரிதல் பெட்ரோனாஸை சரவாக்கில் ஒரு முக்கிய நிறுவனமாக அங்கீகரிக்கும் அதே வேளையில், அதன் செயல்பாடுகளைத் தொடரவும் அனுமதிக்கிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மலேசியாவின் நிலையை உயர்த்த இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும் ”என்று அவர் கூறினார்.

ஆசியானில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைக்கான பிராந்திய மையமாக சரவாக்கை நிலைநிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அன்வார் கூறினார்.

“இது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் மற்றும் சரவாக்கின் நிலையை மேம்படுத்தும் ஒரு யதார்த்தமான மற்றும் மூலோபாய நடவடிக்கை என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப்; சரவாக் பயன்பாடுகள் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஜுலைஹி நராவி; மற்றும் பணிகள் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அசார் அப்பாஸ்; அட்டர்னி ஜெனரல் டத்தோ முகமட் துசுகி மொக்தார்; மற்றும் சரவாக் அட்டர்னி ஜெனரல் டத்தோ சஃபெரி அலி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 17, 2025 அன்று, மத்திய மற்றும் சரவாக் அரசாங்கங்கள் சரவாக்கின் சொந்த எண்ணெய் மற்றும் எரிவாயு துறையை வளர்க்கும் விருப்பத்தை ஒப்புக்கொண்டதாக அன்வார் கூறினார். இது வரும் DGO மூலம் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். மார்ச் 1, 2025 முதல் அமலுக்கு வரும். — பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here