பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பெர்சத்து பிரதிநிதியின் முன்னாள் உதவியாளருக்கு 13 ஆண்டுகள் சிறை!

கோலாலம்பூர்:

பாலியல் பலாத்கார வழக்கில், பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் முன்னாள் உதவியாளருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் இரண்டு தடியடிகளும் விதித்து இன்று அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த மே 31 ஆம் தேதி நீதிபதி நோர் ஹஸ்னியா அப்துல் ரசாக் எழுதிய தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட முகமட் சுல்பாஹிமின் மஹ்ட்ஸிர், 40, ஐ குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.

இங்குள்ள ஸ்ரீ ஹர்தாமாஸில் உள்ள ஹோட்டல் அறையில், 2020 டிசம்பர் 5 ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் முஹமட் ஹில்மன் இதாமின் உதவியாளரான முகமட் சுல்பாஹிமின் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அவரது தீர்ப்பில், அரசு தரப்பு வழக்குக்கு எதிராக நியாயமான எந்த சந்தேகத்தையும் எழுப்பத் தவறியதாக அவர் கூறினார்.

சுல்பாஹிமின் மீது குற்றவியல் சட்டத்தின் 376(1) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here