மக்கோத்தா இடைத்தேர்தல்: நாளை வாக்களிப்பு

குளுவாங்:

க்கோத்தா மாநில இடைத்தேர்தலின் நாளை வாக்குப்பதிவு நாளுக்கான ஏற்பாடுகள் சுமூகமாக நடந்து வருவதாக தேர்தல் ஆணைய செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் தெரிவித்தார்.

இடைத்தேர்தலுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தின் 1,126 பணியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

“படிவங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களின் சரிபார்ப்பு, மை விநியோகம் உட்பட அனைத்தும் ஒரே சீரான பாதையில் உள்ளதாகவும், வாக்குச் சீட்டுகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

“நாளைக் காலை திறக்கப்பட உள்ள 20 வாக்குச்சாவடி மையங்களுக்கான ஆரம்ப பணிகளை ஆய்வு செய்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here