பசாரியா வாங்சா மாஜூவில் தீ சம்பவம்; 8 கடைகள் தீயில் எரிந்து நாசம்

கோலாலம்பூர்:

ங்குள்ள பசாரியா வாங்சா மாஜூவில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ சம்பவத்தில் 8 கடைகள் எரிந்து நாசமாயின.

குறித்த சம்பவம் தொடர்பில் கோலாலம்பூரில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு மையத்திற்கு காலை 7.02 மணிக்கு அழைப்பு வந்தது என்று, செயற்பாட்டுத் தலைவர் எம்.லெட்சுமணன் கூறினார்.

உடனே ஸ்தாப்பாக் தீயணைப்பு நிலையத்தினரின் உதவியுடன் வாங்சா மாஜூ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து இரண்டு என்ஜின்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன என்றார்.

அங்கு சென்ற குழு ” எட்டுக் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டதைக் கண்டறிந்தது. மேலும் 14 பேர் கொண்ட குழு விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது என்று அவர் சொன்னார்.

எவ்வாறாயினும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here