265 கிலோ கெத்தும் இலைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்பதி கைது

சிப்பாங்:

சுமார் RM10,600 மதிப்பிலான 265 கிலோ பச்சை கெத்தும் இலைகள் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு திருமணமான தம்பதியை இன்று (ஆகஸ்ட் 2) அதிகாலை போலீசார் கைது செய்தனர்.

வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு அதிகாலை 2.30 மணியளவில் கணவன், 36 மற்றும் மனைவி, 38 ஆகிய இருவரையும் கைது செய்ததாக சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.

தம்பதிகள் பயணித்த நிசான் நவரா வாகனத்தில் சோதனை மேற்கொண்டபோது, ​​கெத்தும் இலைகள் என சந்தேகிக்கப்படும் பச்சை இலைகள் கொண்ட பிளாஸ்டிக் பைகளை போலீசார் கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர் என்றார்.

இரு சந்தேக நபர்களும் வரும் திங்கட்கிழமை வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்த வழக்கு விஷம் சட்டம் 1952 இன் பிரிவு 30(3) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here