சுனிதா வில்லியம்ஸ்க்கு எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு – நாசா தகவல்

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்

அவர்கள் திட்டமிட்டபடி 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்தனர். இந்த பிரச்சனையால் 50 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் விண்வெளியில் சிக்கியுள்ள 2 வீரர்களும் தங்களது தசை சக்தி, மற்றும் எலும்பு அடர்த்தியை இழந்திருக்கலாம் என்றும் அதனால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது . மேலும் நீரிழப்பு, மற்றும் எலும்புகளில் இருந்து கால்சியம் வெளியேறும் காரணத்தினால் அவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here