நரகத்திலிருந்து 402 சிறார்கள், பதின்ம வயதினர் மீட்பு

கோலாலம்பூர்:

தொண்டூழிய இல்லங்களில் நரக வேதனையை அனுபவித்து வந்த ஒரு வயது முதல் 17 வயது வரையிலான 402 சிறார்களையும் பதின்ம வயதினரையும் மீட்ட போலீஸ் உஸ்தாதுகள் உட்பட 171 பேரை கைது செய்திருக்கிறது.

ஓப்ஸ் குளோபல் எனும் பெயரில் சிலாங்கூரில் 18 இல்லங்களிலும் நெகிரி செம்பிலானில் இரண்டு இல்லங்களிலிருந்தும் 201 ஆண் பிள்ளைகளையும் 201 பெண் பிள்ளைகளையும் போலீஸ் காப்பாற்றியது என்று ஐஜிபி டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் செய்தியாளர்களிடம் கூறினார்.

பகாங் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இத்தகவலை வெளியிட்டார். பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓஸ்மான், துணைத் தலைவர் டத்தோ நோர் இஷாம் நோர்டின் ஆகியோரும் உடன் இருந்தனர்.

குளோபல் இக்வான் சர்வீசஸ், பிஸ்னஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நடத்தி வந்த இந்த தொண்டூழீய இல்லங்களில் பிள்ளைகள் பெரும் சித்திரைவதைகளை அனுபவித்து வந்திருக்கின்றனர். இச்சிறார்களிடம் ஓரின தகாத உறவு கொண்டதோடு மட்டுமன்றி அதனை எவ்வாறு செய்வது பற்றி அப்பிள்ளைகளுக்கு கற்றும் தந்திருக்கின்றனர் என்று ரஸாருடின் தெரிவித்தார்.

மனித கடத்தல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களிலும் இக்கும்பல் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கைது செய்யப்பட்ட 171 பேரில் 17 முதல் 64 வயதிற்குட்பட்ட 105 பெண்களும் அடங்குவர். தடை செய்யப்பட்ட அல்-அர்காம் கும்பலின் புதிய இயக்கம் தகன்குளோபல் இக்வான் சர்வீசஸ், பிஸ்னஸ் ஹோல்டிங்ஸ் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here