படுக்கை அறையின் சுவரில் தெய்வத்தின் திருவுருவப்படங்கள் இருப்பது சரியா? தவறா?

வீட்டில் இருக்கும் மற்ற அறைகளை காட்டிலும் படுக்கை அறையில் தெய்வப் படங்களை மாட்டுவது சரியா? தவறா? என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும்.

கணவன் மனைவி ஒன்றாக உறங்கும் அறையில் தெய்வத்தினுடைய திருவுருவ படங்களை வைத்திருப்பது எந்த அளவிற்கு சரியாக இருக்கும்? இதனால் ஏதாவது தோஷங்கள் ஏற்படுமா? இக்கேள்விகளுக்கான விடைகளை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

பொதுவாக தெய்வத்தினுடைய திருவுருவப் படங்கள் பூஜை அறையில் இருப்பது, சமையல் அறையில் இருப்பது, வரவேற்பறையில் இருப்பது கூட நல்லது தான். ஆனால் படுக்கை அறையில் வைப்பது என்பது சற்று சங்கடத்திற்கு உரியதாக இருக்கிறது. கணவன்-மனைவி புழங்கக்கூடிய படுக்கை அறையில் தம்பதியராக இருக்கும் சிவபார்வதியின் படத்தை வைக்கலாம்.

தம்பதியினரின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் படத்தை தாராளமாக வைக்கலாம். இதனால் கணவன் மனைவிக்குள் ஏற்படும் அன்னோன்யம் மேலும் அதிகரிக்கும் என்கிறது ஜோதிடம். அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வருபவர்களுக்கு கணவன்-மனைவிக்குள் ஏற்படும் சிக்கல்கள் விரைவாக தீருமாம். அத்தகைய அர்த்தநாரீஸ்வரர் படத்தை உங்களுடைய படுக்கை அறையில் மாட்டிக் கொள்ளலாம்.

மேலும் படுக்கை அறையில் காலையில் எழுந்ததும் கண் விழிக்கும் பொழுது மகாலட்சுமியின் திருவுருவப்படம் வைத்திருப்பதும் அதிர்ஷ்டம் தான். எழுந்ததும் முதலில் பார்க்கும் பிம்பத்திற்கு வலிமை அதிகம். அன்றைய நாள் முழுக்க சம்பாதிக்க வேண்டும்! பணத்தை ஈட்ட வேண்டும் என்கிற உணர்வை மகாலட்சுமியின் திருவுருவப் படத்தை பார்க்கும் பொழுது ஏற்படும். இவைகளை தவிர மற்ற தெய்வங்களின் திருவுருவப் படங்களை படுக்கை அறையில் அமைப்பதை கட்டாயம் தவிர்த்து விடவும்.

படுக்கை அறையில் அமைத்திருக்கும் கண்ணாடிகள் எப்பொழுதும் திரையிட்டு மறைத்து வைத்திருப்பது மிகவும் நல்லது. திறந்த படி கண்ணாடிகளை வைப்பது கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கத்தை குறைக்கும். தேவையில்லாத சந்தேகங்களையும், சண்டை, சச்சரவுகளையும் உருவாக்கும் என்று எச்சரிக்கிறது சாஸ்திரம்.

பெரும்பாலான வீடுகளில் மிகப் பெரிய கண்ணாடிகள் படுக்கை அறையில் தான் அமைத்து வைத்திருப்பார்கள். மற்ற தெய்வங்களின் படங்களையும், விலை உயர்ந்த கண்ணாடிப் பொருட்களையும் வைத்திருப்பார்கள். கண்ணாடி என்பது சுக்கிரனின் அம்சமாக விளங்குகிறது, இவற்றை படுக்கை அறையில் அமைப்பதை விட வரவேற்பறையில் அமைப்பது தான் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். பெரிய அளவிலான கண்ணாடிகள், பீரோ கண்ணாடி போன்றவை கூட எப்பொழுதும் திரையிட்டு மறைத்து வைத்திருப்பது மிகவும் நல்லது. இதனால் கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள் குறையும். அதுபோல் நீங்கள் படுக்கும் படுக்கையை கீழே எப்பொழுதும் இரும்பு சார்ந்த பொருட்களை வைத்திருக்கக் கூடாது. இரும்பு சனி பகவானுடைய அம்சம் என்பதால் இவற்றை படுக்கைக்கு கீழே அமைப்பதைத் தவிர்ப்பது உத்தமம்.

அது போல் உலோகங்களில் தண்ணீரை நிரப்பி வைப்பது ஒவ்வொரு பலன்களை கொடுக்கும். வெள்ளி, செம்பு, இரும்பு, பித்தளை, தங்கம் போன்ற ஒவ்வொரு உலகங்களிலும் தண்ணீரை நிரப்பி நீங்கள் படுக்கும் படுக்கையை கீழே வைத்திருப்பது ஒவ்வொரு பலன்களை கொடுக்கும். மன பயம் நீங்கவும், ஆழ்ந்த தூக்கம் ஏற்படவும் செம்பு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி படுக்கைக்கு கீழே வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி விட்டு மீண்டும் இரவில் இதே போல செய்து வரலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here