புவனேஷ்வர்: இந்தியாவில் வடமாநிலங்களில் புகழ் பெற்ற கன்வார் யாத்திரை நடந்து வருகிறது.பீகாரில் சோனாப்பூரில் உள்ள பாபா ஹரிகர்நாத் கோவிலில் வழிபாடு செய்வதற்காக கன்வார் பக்தர்கள் கார்களில் சென்று கொண்டிருந்தனர்.
வைசாலி மாவட்டத்தில் இருக்கும் சுல்தான்பூர் என்ற கிராமத்தின் அருகே வந்தபோது, மின்சார கம்பிகள் அறுந்து பக்தர்கள் அமர்ந்திருந்த கார் ஒன்றின்மீது விழுந்தது. இதில், அந்தக் காரில் பயணம் செய்த 9 பேர் மின்சாரம் தாக்கி பலியாகினர்.
மேலும், 3 பேர் தூக்கி வீசப்பட்டதில் படுகாயங்கள் அடைந்தனர். இதுகுறித்து வைசாலி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.