9ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த தங்கையை சுட்டுக்கொன்ற அண்ணன்

9ஆம் வகுப்பில் கணித தேர்வில் தூவியடைந்த தங்கையை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஒகாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இரவுநேரத்தில் தாய் உறங்கியபின்பு தோல்வியடைந்தத்த்து குறித்து தங்கை சஜிதாவிடம் அவரது அண்ணன் அதில் உசைன் கேள்வி கேட்டுள்ளார். அது பின்பு வாக்குவாதமாக மாறியுள்ளது.

சத்தம் கேட்டு முழித்த தாய் தனது மகனிடம் சண்டையை நிறுத்துமாறு கோரியுள்ளார். ஆனால் தாயின் பேச்சை கேட்காத உசைன் தனது துப்பாக்கியை எடுத்து தங்கையை சுட்டுள்ளார். பின்பு துப்பாக்கியுடன் அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.

துப்பாக்கி சூட்டால் பலத்த காயமடைந்த சஜிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாயார் கொடுத்த புகாரின் பேரில் அவரது மகன் மீது கொலைவழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here