கோவை: கோவை மாநகரில் சிறிய தெருக்களில் போலீசார் ரோந்துப் பணியை மேற்கொள்ள ‘டிரைக் பைக்’ என்ற அதிநவீன வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தில் எப்படி இந்தியன் தாத்தா ஒரு வாகனத்தில் செல்வாரோ அதே பாணியில் வாகனம் இருப்பதாக இந்த வாகனத்தை பற்றி நெட்டிசன்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த பைக் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
கோவை மாநகரம் சென்னைக்கு அடுத்தபடியாக மிகவேகமாக வளர்ந்து வரும் நகரம் ஆகும். 90களில் ஸ்பின்னிங்க் மில்களும், தறி மில்களும் அதிக அளவில் இயங்கி வந்த கோவை, ஒரு காலக்கட்டத்தில் தொழிலாளர்களின் நகரமாக இயங்கி வந்தது. இன்று கோவை மாநகரம் மிகப்பெரிய வளர்ந்துவிட்டதால் ஏரளமான தொழிற்சாலைகள் கோவை நகரில் இருந்து வெளியேறி புறநகர் பகுதிகளுக்கு போய் விட்டன. பல புதிய நிறுவனங்களுமே புறநகர் பகுதிகளிலேயே செயல்படுகின்றன. கோவை முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளும், வீடுகளும் கடந்த 20 வருடங்களில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து விட்டது.
தொழிற்சாலைகள் இருந்த இடங்கள் மால்களாக மாறி உள்ளன. பல சிறிய நிறுவனங்கள் இருந்த இடம் எல்லாமே முழுமையாக குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன. கோவை மாநகரம் உக்கடத்தில் தொடங்கி நீலாம்பூர் வரை அவினாசி சாலையில் நகரமாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. இதேபோல் திருச்சி சாலையில் சூலூர் வரையிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொண்டாமுத்தூர் வரையிலும் நகரம் விரிவுடைந்துவிட்து.
பொள்ளாச்சி சாலைலயில் ஈச்சனாரி வரையிலும், பாலக்காடு சாலையில் மதுக்கரை வரையிலும், மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை வரையிலும், சத்தி சாலையில் கோவில்பாளையம் வரையிலும் கோவை மாநகரம் வளர்ந்துவிட்டது. ஆனால் கோவை மாநகராட்சி பகுதி என்பது கோவையின் 100 வார்டுகள் மட்டுமே உள்ளன. இங்கு சுமார் 7000 தெருக்கள் உள்ளன. இதில் பலத்தெருக்கள் மிகவும் குறுகலானவையாகவும் உள்ளன. இந்த தெருக்களில் போலீசார் ரோந்துப் பணியை மேற்கொள்ள ‘டிரைக் பைக்’ என்ற அதிநவீன வாகனம் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் “டிரைக் பைக்” இந்த பைக்கில் ஏறி ஆய்வு செய்து தொடங்கி வைத்தார். இருசக்கர வாகனம் போல் இல்லாமல் ஆட்டோவில் பாடி இல்லாமல் இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் டிரைக் பைக் இருக்கிறது. மூன்று சக்கரம் உள்ள இந்த வாகனத்தை சிறிய தெருக்களில் எளிதாக ஓட்டிச் செல்ல முடியும். எலக்ட்ரிக் வாகனமாக உள்ள இந்த வாகனத்தில் போலீசார் இனி ஆய்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.