கெடா மந்திரி பெசார் சனுசி நோரின் தாயார் அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் இன்று காலை காலமானார். சனுசியின் செய்தித் தொடர்பாளர் முஹமட் மாட் யாகீம்,ம ரியம் அகமதுவின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, 74 வயதான மரியம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் HSB இன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இன்று பிற்பகல் இறுதி சடங்குகள், அடக்கம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு முகநூல் பதிவில், பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் சனுசிக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். தாயை இழந்த சோகமும், மன வேதனையும் விவரிக்க முடியாதது என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.









