சாலை விபத்தில் போலீஸ் அதிகாரி மரணம்

ஈப்போ,

இன்று வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 287.2 கிலோ மீட்டரில் நிகழ்ந்த விபத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். தைப்பிங் போலீஸ் தலைமையகத்தின் குற்ற புலனாய்வு பிரிவில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் முகமட் ஹெல்மி (வயது 30) இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

காலை 10 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் முகமட் ஹெல்மி பயணித்த மோட்டார் சைக்கிளும் பூர்வக்குடி நபர் பயணித்த வாகனமும் மோதிக் கொண்டன.
போலீஸ் அதிகாரியின் மோட்டார் சைக்கிள் அந்த பூர்வக்குடி நபரில் வாகனத்தை பின் திசையிலிருந்து மோதியதை அடுத்து முகமட் ஹெல்மிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து அவரின் சடலம் ராஜா பெர்மைசூரி பைனூன் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் ஸைனால் அபிடின் விவரித்தார்.

அதே சமயம் அந்த பூர்வக்குடி நபருக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. மேலும் இந்த விபத்து குறித்து 1987 சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 41(1) கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் விவரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here