ஷா ஆலமில் உள்ள கால்வாயில் மிதந்த பெண்ணின் சடலம்!

பெட்டாலிங் ஜெயா:

புக்கிட் பண்டாராயா, செக்சன் U11, டில்லேனியா ஹவுசிங் பகுதிக்கு அருகில் உள்ள பெரிய வாய்க்காலில் நேற்று ஒரு பெண்ணின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

நேற்று (ஆகஸ்ட் 16) மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் குறித்து பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது என்று ஷா ஆலம் ஓசிபிடி துணை ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இறந்தவர் ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் அவரது அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

“இறந்தவரின் உடலில் சிலாங்கூர் காவல் படைத் தலைமையகம் நடத்திய ஆய்வில், அவரது மரணத்திற்குக் காரணமான போராட்டத்தின் அறிகுறிகளோ அல்லது பிற காயங்களோ இல்லை” என்று அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மரணத்திற்கான காரணத்தை அடையாளம் காண பிரேத பரிசோதனைக்காக உடலை ஷா ஆலம் மருத்துவமனைக்கு அனுப்பியதாக முகமட் இக்பால் மேலும் தெரிவித்தார்.

“விசாரணை திடீர் மரண அறிக்கையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here