பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி ஒருவர், நேற்று இரவு கோரமங்கலா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு பைக்கில் லிப்ட் கேட்டுள்ளார்.
இந்நிலையில், இளம்பெண்ணுக்கு லிப்ட் கொடுத்த நபர், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.




















