புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அதிகாரபூர்வப் பயணமாக போலந்துக்குப் புறப்பட்டுள்ளார். அங்கு, அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரைச் சந்தித்து பேசும் மோடி, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களைச் சந்தித்து உரையாடுகிறார்.
2022ஆம் ஆண்டு உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த நேரத்தில், இந்திய மாணவர்களை மீட்க பெரிதும் உதவியது போலந்துதான். அந்தச் சம்பவம் இந்தியா-போலந்து உறவின் பலத்தை எடுத்துக்காட்டியது. இந்த உறவை மேலும் பலப்படுத்தவும், ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக உறவை வளர்த்துக்கொள்ளவும் இந்தியா போலந்துடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறது.
1979ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். அதன் பின்னர், 45 ஆண்டுகள் கழித்து போலந்து செல்லும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.