முதல் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, சந்திரயான்-3 விண்கலம் நிலவில் எடுத்த பிரத்யேக புகைப்படங்களை இஸ்ரோ இன்று வெளியிடவுள்ளது.
கடந்தாண்டு இதே நாளில், உலகமே இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் வகையில், நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சாதனையை காலத்திற்கும் நினைவில் வைத்திருக்கும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், முதல் தேசிய விண்வெளி தினத்தை ஒட்டி, சந்திரயான்-3 விண்கலம் நிலவில் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ இன்று வெளியிடுகிறது. அதற்கு முன்பு, SNEAK PEAK எனப்படும் அந்த புகைப்படங்களுக்கான முன்னோட்டத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.




















