முதல்வர் ஸ்டாலினுக்கு ‘சர்ப்ரைஸ்’ வரவேற்பு கொடுத்த அமெரிக்க வாழ் தமிழர்கள்

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் ஸ்டாலினையும், அவரது துணைவியாரையும் அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். முதல்வரை வரவேற்கும் வகையில் ஒரு குழுவினர் நடனம் ஆடினர்.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றார். அமெரிக்கவாழ் தமிழர்கள், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்வர் ஸ்டாலினையும், அவரது துணைவியாரையும் அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும், முதல்வரை வரவேற்கும் வகையில் அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர்கள் குழுவினர், தமிழின் பெருமைகளை சிறப்பிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி நடனம் ஆடினர்.அமெரிக்கா சென்றடைந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவை ஈட்ட, வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவுக்கு வந்திருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். “செம்மொழியான தமிழ்மொழியே..” பாடலுக்கு அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆடிய நடனத்தை ரசித்தார் முதல்வர் ஸ்டாலின். பின்னர், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here