கோலாலம்பூர்:
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்ட திடீர் நிலஅமிழ்வில் சிக்கிக்கொண்ட விஜயலட்சுமியை தேடி, மீட்கும் நடவடிக்கைக்காக லோரோங் துவாங்கு அப்துல் ரஹ்மான் இரவுச் சந்தை நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) தற்காலிகமாக மூடப்படும்.
லோரோங் துவாங்கு அப்துல் ரஹ்மான் மற்றும் மஸ்ஜிட் இந்தியாவைச் சுற்றி மண் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தது.









