பெட்டாலிங் ஜெயா:
கம்போங் பாங்கி லாமாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக நூற்றுக்கும் மேற் பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
காலை 8.47 மணி நிலவரப்படி 79 பேர் இங்கிருந்து பாதுகாப்பான இடங்களிற்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், சுமார் 100 பேர் தாங்களாகவே வெளியேறியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
“Kampung Bangi MPKK Balairaya மற்றும் தடிகா பெர்பாடுவான் தாமன் பாங்கி ரியா ஆகியவை தற்காலிக வெளியேற்ற மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன. தற் போது நீர் நிலைகள் தேங்கி நிற்கின்றன,அவர்களின் நலனில் மெழுகி அக்கறையுடன் செயற் பட்டு வருகிறோம் ” என்று அவர் கூறினார்.





















