தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்ஷக்னா ‘சிம்பா’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.
ஹைதராபாத்,‘ஹனுமான்’ தெலுங்கு படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடியை வசூலித்தது. இந்தப் படத்தை இயக்கியவர் பிரசாந்த் வர்மா. அவரது அடுத்த படம் ‘சிம்பா’. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா மகன் மோக்ஷக்னா நடிகராக அறிமுகமாகிறார். ஹனுமான் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை, லெஜண்ட் புரொடக்ஷன் மற்றும் எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கிறது.நடிகர் மோக்ஷக்னாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் பிரசாந்த் வர்மா, “பாலகிருஷ்ணாவின் ஆசியுடன், அவரது மகனை இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.




















