பாரத் ஜோடோ யாத்திரை அரசியலில் அன்பை புகுத்தியது: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, 3 நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்கா சென்றார். எதிர்க்கட்சி தலைவர் ஆன பிறகு அவர் அமெரிக்கா செல்வது இதுவே முதல்முறை. டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகருக்கு போய்ச் சேர்ந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினரும், காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில், டெக்ஸாசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது:- இந்தியாவுக்கு திறமையில் சிக்கல் இருப்பதாக பலர் கூறுகிறார்கள். திறமைகளை மதிப்பதில்தான் இந்தியாவுக்கு சிக்கல் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஏற்கனவே இருக்கும் திறன்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் நான் நம்பவில்லை. கல்வி முறை இந்தியாவின் திறன் கட்டமைப்போடு எந்த வகையிலும் இணைக்கப்படவில்லை. தற்போதுள்ள கல்வி முறையில் மிகப்பெரிய பிரச்சினை கருத்தியல் தான். பாரத் ஜோடோ யாத்திரை அரசியலில் அன்பை புகுத்தியது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here