கோலாலம்பூர்:
தலைநகர் கோலாலம்பூர் சுற்றுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் 153 கிலோ எடையிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட அந்தப் போதைப் பொருளின் சந்தை மதிப்பு 5.88 மில்லியன் ரிங்கிட் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட அந்த அதிரடிச் சோதனையின் போது பல்வேறு வகையான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மூன்று நபர்களும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். 30 முதல் 33 வயதுக்குட்பட்ட அம்மூவரும் செராஸ், தாமான் முத்தியாரா ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டனர் என்று போதைப்பொருள் குற்றச்செயல் துடைத்தொழிப்பு பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ காவ் கோக் சின் தெரிவித்தார்.