பெங்களூரு: கர்நாடகாவில் பெங்களூரு, கோலார், மங்களூரு, தாவணகெரே, சித்ரதுர்கா, மைசூரு உள்ளிட்ட இடங்களில் கடந்த திங்கள்கிழமை இரவு மிலாடி நபி ஊர்வலம் நடைபெற்றது.
இந்நிலையில் கோலார், சித்ரதுர்கா, தாவணகெரே ஆகிய 3 இடங்களில் நடந்தஊர்வலத்தில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பாலஸ்தீன நாட்டின் கொடியை ஏந்திசென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகியஅமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா கூறுகையில், ‘‘கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுவதால் அவர்கள்எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவை வளாகத்திலேயே பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கம் எழுப்பினர். இப்போது பாலஸ்தீன கொடியை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக செல்கிறார்கள். மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை விதைக்கும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அவர்களின் பின்னணி குறித்து விளக்கம்அளிக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.