ஐரோப்பாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் அஜித்

நடிப்பு மட்டும் அல்லாமல் கார் மற்றும் பைக் ரேசிங்கில் மிகப்பெரிய அளவில் ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித் என நமக்கு தெரிந்த விஷயம் தான். பைக்கை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் அவருக்கு பிடித்த இடத்திற்கு செல்லும் பழக்கமுடையவர்.

இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ரேஸ் டிராக்கில் களம் இறங்கப் போகிறார் என்றும் தி ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா சார்பில் அஜித் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்க யுரோப்பியன் ஜிடி4 சாம்பியன்ஷிப் ரேஸிங் ஈவண்டில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற புதிய கார் பந்தய அணியை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்த்ரா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஃபேபியன் டஃபியூ என்பவர் இந்த அணியின் அதிகாரப்பூர்வ ரேஸிங் ஓட்டுநராக செயல்படுவார் எனவும் ஐரோப்பாவில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் போர்ஷே 99 GT3 கப் பிரிவில் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அஜித் இதற்குமுன் நடந்த தேசிய மோட்டார்சைக்கிள் ரேஸிங் சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப், ஆசிய ஃபார்முலா BMW சாம்பியன்ஷிப் ஆகிய ரேஸிங் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜூன், ரெஜினா மற்றும் ஆரவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தாண்டு இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here