4 இந்திய டெலி மூவி படங்கள் ஆஸ்ரோவில் முதல் முறையாக ஒளிபரப்பு

ஆஸ்ரோவில் 4 இந்திய டெலி மூவி படங்கள்

நாட்டில் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ குழுமம் அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றது.

உள்நாட்டுக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்க இந்நிறுவனம் தவறுவதில்லை.

குறிப்பாக தயாரிக்கும் படைப்புகளில் உள்நாட்டு கலாச்சார அம்சங்களும் கட்டாயம் உள்ளடக்கி இருப்பதை ஆஸ்ட்ரோ உறுதி செய்கின்றது.
அவ்வகையில் தற்போது புத்தாண்டை முன்னிட்டு நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி மக்களைக் கவரும் வகையில் ஆஸ்ட்ரோ நிறுவனம் 4 தொலைக்காட்சிப் படங்களைத் (TELEMOVIE)தயாரித்துள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் பஞ்சாபி மொழிகளில் இந்த டெலிமூவி படங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க உள்நாட்டுக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஆஸ்ட்ரோ குழுமத்தின் இந்திய அலைவரிங்கைள் வர்த்தகப் பிரிவு உதவி துணைத் தலைவர் மார்க் லூர்ட்ஸ் கூறுகையில், மலேசியாவில் வாழும் அனைத்து இன மக்களின் கலாச்சாரத்திற்கும் ரசனைக்கும் எங்கள் நிறுவனம் மதிப்பளிக்கின்றது.

உள்நாட்டுக் கலைஞர்களுக்கு எங்களால் முடிந்த வரை தொடர்ந்து வாய்ப்பளித்து வருகின்றோம். அதிலும் நாங்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்துவதில்லை.

வானொலி அலைவரிங்கைளுக்கும் முக்கியத்துவம் வழங்குகின்றோம்.

இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் உள்நாட்டுப் படைப்புகளை அதிகளவில் ரசிக்கின்றனர். இது மிகவும் ஆரோக்கியமான சூழ்நிலையாகும்.

அவர்களைக் கவரவே ON DEMAND, ASTRO GO எனும் பல சிறப்பு அலைவரிங்தை் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.

கண்மணி அன்போடு காதலன் (தமிழ்)

தற்போது தமிழ்மொழியில் காதலன் எனும் தலைப்பில் டெலிமூவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வெண்பா திரைப்படப் புகழ் இயக்குநர் கவிநாதன் இயக்கியுள்ளார்.

நாட்டில் புகழ்பெற்ற இந்தியக் கலைஞர்களான குபேன் மகாதேவன், பாஷினி உட்பட பலரும் இதில் நடித்துள்ளனர்.

உடல் அமைப்பு கேலி செய்யப்படுவதை முன்னிருத்தி இப்படத்தின் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது என இயக்குநர் கவிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொலைக்காட்சி படத்தின் கதைக்களம் முற்றிலும் மாறுபட்ட முறையில் அமைக்கப்பட்டுள்ளது. குபேன் மற்றும் பாலினி தங்கள் கதா பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமாக அமைந்துள்ளது.

மேலும் ஆஸ்ட்ரோ நிறுவனம் தொடர்ந்து பல உள்நாட்டுக் கலைஞர்களை அடையாளப்படுத்தி வருகின்றது. அவ்வகையில் தற்போது கார்த்திக் ஷாமளன் இயக்கத்தில் கள்வனைக் கண்டுபிடி மற்றும் 4 மொழி தொலைக்காட்சி படங்களைத் தயாரித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

நாயகன் குபேன்: டாக்டராகவோ வழக்கறிஞராகவோ ஆக வேண்டியவர். என்னை நடிகனாக்கி இறைவன் உங்களை எல்லாம் காப்பாற்றி விட்டான்.

நாயகி பாஷினி: ஒரு நடிகை என்ற முறையில் ஆக்கப்பூர்வமான தகவல்களைச் சமுதாயத்திற்குச் சொல்லும் கடமையும் பொறுப்பும் எனக்குள்ளது.

அச்சம்மைக்கு ஒரு விஷுகனி (மலையாளம்)

மலேசிய வரலாற்றில் விஷு பெருநாளை முன்னிட்டு தொலைக்காட்சி படம் உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.

கீதையின் ராதை, புலனாய்வு போன்ற திரைப்படங்களை இயக்கிய ஷாலினி பாலசீந்தரம் இந்தத் தொலைக்காட்சி படத்தையும் இயக்கியுள்ளார்.

அறிவிப்பாளர் ஆனந்தா, டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இது குறித்து இயக்குநர் ஷாலினி கூறுகையில், இது நான் இயக்கும் முதல் மலையாளப் படமாகும். எனக்கு மலையாளம் தெரியாது. ஆனாலும் அவர்களின் கலாச்சாரத்தை அறிவேன்.

எனவே முன் ஏற்பாடாக நிறைய மலையாள திரைப்படங்களைப் பார்த்து தெரிந்து கொண்டேன் எனக் கூறினார்.

இந்தத் தொலைக்காட்சி படம் விஷு பெருநாளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதற்காக இப்பெருநாள் குறித்த கலாச்சார -பாரம்பரிய அம்சங்களை நாங்கள் ஆய்வு செய்து படத்தில் இடம்பெறச் செய்துள்ளோம். பொருளாக வைத்துள்ளோம் என்றார்.

நாயகன் ஆனந்தா: பாடுவது எனக்கு அலாதி பிரியம். நடிப்பும் அறிவிப்பும் ஆத்ம திருப்தியைக் கொடுக்கிறது. உள்நாட்டுக் கலைஞர்களுக்கு ஆதரவு நல்குவதில் ஆஸ்ட்ரோவுக்கு நிகர் ஆஸ்ட்ரோதான்.
நாயகி டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர்: விஷுவுக்குச் சிறப்பு டெலிமூவி. இது வரலாற்று சிறப்புக்குரியது. ஆஸ்ட்ரோவுக்கு நன்றி.

ரங்குலு (தெலுங்கு)

இந்தத் தெலுங்கு தொலைக்காட்சி படத்தை சோமகாந்தன் இயக்கியுள்ளார். நாட்டில் சீமார் 100,000 தெலுங்கு வம்சாவளி மக்கள் உள்ளனர். இந்தியாவில் வாழும் பெரும்பாலான தெலுங்கு மக்களுக்குத் தமிழ்மொழி தெரியாது.

ஆனால் நம் நாட்டில் வாழும் பெரும்பாலான தெலுங்கு மக்கள் சரளமாகத் தமிழ் பேசுவர். எனவே இந்தப் படத்தின் வசனப் பகுதியில் நாங்கள் அதிகம் உழைத்தோம்.

கதைக்களம் மலேசிய மக்களைச் சுற்றி நடப்பதால் அதற்கேற்றாற்போல் வசனங்களும் இருப்பதை நாங்கள் உறுதி செய்து கொண்டோம். இதற்காக இயக்கப் பிரிவில் 5 பேர் பணிபுரிந்திருக்கின்றனர்.

மேலும் ரங்குலு என்றால் வர்ணம் எனப் பொருள் பெறும். இப்படத்தைப் பார்க்கும் அனைவரும் இக்கைதையில் தங்கள் வாழ்வில் நடந்தவற்றை நினைவு கூர்வர் என்றும் தெரிவித்தார்.

ரப்பா மேரேயா (பஞ்சாபி)

வைசாக்கி பெருநாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொலைக்காட்சிப் படத்தை அர்ஜுன் உப்பால் இயக்கியுள்ளார். அவிந்தர் சிங், நவிந்தர் கவுர், ஹேமந்த் ஷெர்கில் மற்றும் பல உள்நாட்டு நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

இது குறித்து இயக்குநர் அர்ஜுன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கையில், நான் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் கலைத் துறையில் இருந்து வருகின்றேன்.

நான் இதுவரை பல பஞ்சாபி மொழி இசை படங்களையும் மலாய் நாடகங்களையும் இயக்கியுள்ளேன். பின்னர் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி இதுவரை 5 மலாய் திரைப்படங்களையும் இயக்கியுள்ளேன்.

தொடர்ந்து மலேசியா மற்றும் இந்தியா நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் கூட்டமைப்பில் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளேன்.

இருப்பினும் என் தாய்மொழியில் படம் இயக்குவது குறித்து நீண்ட நாட்களாகச் சிந்தித்து வந்தேன். இச்சூழ்நிலையில்தான் ஆஸ்ட்ரோ குழுமம் என்னை அணுகியது. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி என் தாய்மொழிக்கும் அது சார்ந்த கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் இந்தத் தொலைக்காட்சி படம் அமையும் என நம்புகின்றேன் என அவர் கூறினார்.

நாயகன் அவிந்தர் சிங்: இதய சீத்தத்துடன் ஆத்மார்த்தமாக உழைத்தால் வெற்றி உறுதி. நடிப்புத் துறையில் ஜொலிக்க முடியும்.
நாயகி நவிந்தர் சிங்: உள்நாட்டுக் கலைஞர்களுக்கு ஆஸ்ட்ரோவே மிகச் சிறந்த மேடை – களம்.

** இந்த 4 தொலைக்காட்சிப் படங்களில் பணிபுரிந்த நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் உள்நாட்டுக் கலைஞர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் ஆஸ்ட்ரோ குழுமத்திற்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here