ஹைதராபாத்: தெலுங்கானாவின் ராஜண்ண சிரிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். துணி நெய்பவரான இவர், ஏற்கெனவே பல பெரும் பிரபலங்களின் புகைப்படங்கள், மகாபாரதம், ராமாயணம், ஸ்ரீ கிருஷ்ணர் உள்ளிட்ட ஓவியங்களுடன் பட்டுப் புடவைகளை நெய்து பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
இப்போது ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகள் திருமணத்துக்காக 200 கிராம் தங்கத்தில் புடவை நெய்துள்ளார். 49 அங்குலம் அகலம், ஐந்தரை மீட்டர் நீளத்தில் மிக அழகான தங்கப் புடவையை 900 கிராம் எடையில் தயாரித்துள்ளார். இந்தப் பட்டுப் புடவையின் விலை ரூ.18 லட்சம் என விஜயகுமார் கூறியுள்ளார்.