கெடாவில் வெள்ள நிலவரம் சீரடைகிறது

அலோர் ஸ்டார்:

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 28 குடும்பங்களைச் சேர்ந்த 97 பேராக இருந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 25 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேராகக் குறைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் உள்ள செக்கோலா மெனெங்கா கேபாங்சான் அலோர் மேராவில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்று, கெடா சிவில் பாதுகாப்புப் படையின் துணை இயக்குநர், மேஜர் முகமட் சுஹைமி முகமட் ஜைன் கூறினார்.

இதற்கிடையில், கோத்தா ஸ்டாரில் உள்ள லெபுஹராய பாலத்தில் உள்ள சுங்கை கெடா எச்சரிக்கை அளவை 1.77 மீட்டர் தாண்டியதாக நீர்ப்பாசன மற்றும் வடிகால் திணைக்களத்தின் பொது இன்போபன்ஜிர் போர்டல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here