பங்களா வீட்டில் புகுந்த 12 முகமூடி கொள்ளையர்கள் 6 லட்சம் ரிங்கிட் பெறுமான பொருள்களைக் கொள்ளையிட்டு தப்பினர்

கிள்ளான், பண்டாமாரான், ஜாகோங் சாலைப் பகுதியில் உள்ள மூன்று மாடி பங்களா வீட்டினுள் புகுந்த 12 கொள்ளையர்கள் அந்த வீட்டிலிருந்த ஆடவர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியதோடல்லாமல் அவ்வீட்டிலிருந்த ரிங்கிட் மலேசியா 6 லட்சம் பெறுமான நகைகளையும் தெய்வச் சிலைகளையும் ரொக்கப் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றனர்.

நேற்று விடியற்காலை 5 மணிக்கு நடந்த அந்தச் சம்பவத்தில் வீட்டின் முன் வாயில் இரும்பு கதவை உடைத்து அந்தக் கும்பல் உள்ளே புகுந்ததாக தென் கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் சா ஹூங் ஃபோங் தெரிவித்தார்.

இரண்டு கார்களில் வந்த அந்தக் கும்பல் வீட்டின் முன்புறச் சுவரில் ஏறி குதித்து உள்ளே புகுந்து பிரதான நுழைவாயில் இரும்பு கிராதியை உடைத்து அவவீட்டின்னுள் புகுந்தது. அப்போது அங்கிருந்த 37 வயது ஆடவரையும் அந்தக் கும்பல் பாராங் கத்தியால் வெட்டியதில் அவருக்கு இடது தோள் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here