குளோபல் இக்வான் இஸ்லாம் சமய நம்பிக்கை, போதனைகளுக்கு எதிரானது என்கிறது பகாங் மாநில அரசு

குவாந்தான்:

குளோபல் இக்வான் நிறுவனத்தின் நடைமுறைகள் இஸ்லாம் சமய நம்பிக்கை, போதனைகளுக்கு எதிரானது என பகாங் மாநில அரசு தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை நடந்த பகாங் மாநில ஷரியா சட்ட ஆலோசனைக் குழு கூட்டத்தில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஏற்றுக் கொண்டு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பெர்லிஸ், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து பகாங் மாநிலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இக் கூட்டத்தில் அல்-அர்காம் அமைப்பு கொண்டு வந்த அவுராத் முஹம்மதியா மீதான நம்பிக்கை, நடைமுறையைத் தொடர முடியாது என்று, பகாங் மாநில முஃப்தி பேராசிரியர் டத்தோ டாக்டர் அஸ்மாடி முஹமட் நயீம் இதனை கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here