ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல்: மாலை 4 மணி நிலவரப்படி 54.01% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்

தாப்பா:

ன்று காலை 8 மணி முதல் நடைபெறும் ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு மாலை 4 மணி நிலவரப்படி, மொத்தம் 54.01% வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

63 முகப்பிடங்களை கொண்ட 19 வாக்குச் சாவடிகளும் காலை 8 மணிக்கு ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன என்றும், இவற்றில் மொத்தம் 18 வாக்குச்சாவடி மையங்கள் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். அதேவேளையில் தோ தந்தேவா தேசிய பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையம் மாலை 4 மணிக்கு மூடப்படும் என்றும் அது இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்த்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமாக 74.85 சதவீதம் வாக்குப் பதிவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here