ஈப்போ:
12 வயது மாணவியை கட்டியணைத்து உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டு ஆபாச படங்களை அனுப்பி வைத்த ஓர் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
ஈப்போவில் உள்ள ஓர் ஆரம்ப பள்ளியின் 37 வயது சீனியர் உதவி தலைமை ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டார் என்று பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி மாட் அரிஸ் கூறினார்.
சம்பந்தப்பட்ட மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கடந்த அக்டோபர் 11 ஆம் கைது செய்யப்பட்டார் என்று அவர் சொன்னார்.
அந்த ஆசிரியர் தன்னுடைய மகளை கட்டி அணைத்து உதட்டில் முத்தமிட்டார் என்றும், அசிங்கமான படங்களை அனுப்பி வைத்தார் என்றும் 47 வயது தாயார் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த 8 மாதங்களாக இந்த நாசச் செயலைப் புரிந்த அந்த ஆசிரியர் அக்டோபர் 17 ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்று அஸிஸி குறிப்பிட்டார்.









