கெடா MPயின் உதவியாளர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் வாக்குவாதம் தொடர்பில் போலீசார் விசாரணை

 கெடா மந்திரி பெசார் சனுசி நோரின் உதவியாளராக கருதப்படும் நபர் ஒருவரை தொடர்புபடுத்திய தகராறின் வைரல் கிளிப்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். 48 மற்றும் 54 வயதுடைய இருவரிடமிருந்து இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு இரண்டு புகார்கள் கிடைத்ததாக கோத்த ஸ்டார் காவல்துறைத் தலைவர் சித்தி நோர் சலாவதி சாத் தெரிவித்ததாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று இரவு 11.50 மணியளவில் இடம்பெற்றதாக அவர் கூறினார்.

வீடியோ கிளிப்பின் அடிப்படையில், பலர் சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது அவர்களில் ஒருவர் வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தாக மேற்கோள் காட்டினார். தாக்குதல் மற்றும் ஆத்திரமூட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறினார். 1 நிமிடம் 20 வினாடிகள் நீடித்த அந்த கிளிப்பில், பல நபர்கள் சனுசியின் உதவியாளர் என்று கூறிய ஒருவருடன் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதைக் காண முடிந்தது.

ஜாலான் பெகாவாய் இரவு சந்தையில் ஒரு வியாபாரியை உதவியாளர் தாக்கியதாக அவர்கள் குற்றம் சாட்டினர். அந்த நபர் குற்றச்சாட்டை மறுத்தார். அப்போது மற்றொரு நபர் போலீசில் புகார் செய்வதாக மிரட்டினார். மந்திரி பெசாரின் உதவியாளர் என்று நம்பப்படும் நபர் உட்பட இருவரிடமிருந்து வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டதாக சலாவதி கூறினார். வழக்கைப் பற்றி ஊகங்களுக்கு எதிராக நாங்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறோம். தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here