சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
திரைப்படத்தின் இரண்டாம் பாடலான யோலோ பாடல் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூர்யா இரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திஷா பதானி , பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ப்ரோமோஷன் பணிகளில் கலந்துக்கொள்ளும் போது சூர்யா ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்தார் அதில் அவர் ‘ நான் சமீபத்தில் நடிகர் அஜித் சாரை சந்தித்தேன். அப்பொழுது அவர் கூறினார் இப்பொ தெரியுதா நான் ஏன் இயக்குனர் சிவா-வ விடலன்னு” என கூறினார்.





















